உருத்திரபுரம் சிவன் கோவிலின் அளவீட்டுப் பணிகள் நிறுத்தப்படும் - சிறீதரன் எம்.பிக்கு அமைச்சர் உறுதி!

Kilinochchi S. Sritharan Vidura Wickramanayaka Government Of Sri Lanka
By Pakirathan May 25, 2023 09:36 AM GMT
Report

உருத்திரபுரம் சிவன்கோவில் மீது தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதாக தொல்லியல் துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு உறுதியளித்துள்ளர்.

இன்றைய தினம் (25) வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கும் இடையில், பத்தரமுல்லயில் அமைந்துள்ள அமைச்சின் தலைமையகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

காணி அபகரிப்பு அறிக்கை 

உருத்திரபுரம் சிவன் கோவிலின் அளவீட்டுப் பணிகள் நிறுத்தப்படும் - சிறீதரன் எம்.பிக்கு அமைச்சர் உறுதி! | Kilinochi Land Issue Minister Said To Sritharan Mp

குறித்த கலந்துரையாடலின் போது, உருத்திரபுரம் சிவன் கோவில், வெடுக்குநாறிமலை, குருந்தூர் மலை, குச்சவெளி விகாரைகள், தையிட்டி விகாரை, ஆனையிறவிலும், கிளிநொச்சி நகரிலும் புதிய விகாரை அமைப்பதற்கான முன்னெடுப்புகள், பரந்தன் சந்தி புத்தர் சிலை, கிளிநொச்சி மகாவித்தியாலயத்துக்கு அண்மையில் விகாரை அமைத்தல் மற்றும் பூநகரி விகாரை உள்ளிட்ட விடயங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.

அதேசமயம், தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புகள் தொடர்பில் தன்னால் தயாரிக்கப்பட்ட அறிக்கையையும் அமைச்சரிடம் கையளித்திருந்தார்.

இதன்போது, புனித பூமிகளுக்குரிய காணிகளை பொதுமக்கள் கையகப்படுத்த முனைவதாலேயே அவ்விடங்களை தாம் அளவீடு செய்வதாக தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டதை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உடனடியாகவே மறுத்துரைத்தார்.

எங்கள் மக்கள் அத்தகைய செயல்களில் ஒருபோதும் ஈடுபடவில்லை எனவும், பொய்யுரைகளைப் பரப்பி மதப்பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடாது எமது மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என மிகக் காட்டமாக தெரிவித்திருந்தார்.

அமைச்சர் உறுதி

உருத்திரபுரம் சிவன் கோவிலின் அளவீட்டுப் பணிகள் நிறுத்தப்படும் - சிறீதரன் எம்.பிக்கு அமைச்சர் உறுதி! | Kilinochi Land Issue Minister Said To Sritharan Mp

நீண்ட நேர விவாதத்தின் பின்னர், உருத்திரபுரம் சிவாலயத்தில் தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதற்கு, தொடர்புடைய திணைக்களங்களுக்கு உத்தரவு பிறப்பிப்பதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க,  நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் உறுதியளித்தார்.

குருந்தூர் மலை மற்றும் வெடுக்குநாறி மலை விவகாரங்கள் தொடர்பில் அவற்றின் வழக்குத் தீர்ப்புகளின் பின்னர் விசேட கலந்துரையாடலை ஒழுங்குசெய்து தீர்மானங்களை மேற்கொள்வதாகவும், தையிட்டி விகாரை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டதே அன்றி, அதற்கும் தொல்லியல் திணைகளத்திற்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

குறிந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், கோவிந்தன் கருணாகரம், தவராசா கலையரசன் மற்றும் குலசிங்கம் திலீபன் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026