பாடசாலை வளாகத்திற்குள் விஷமிகள் செய்த நாசகர செயல்: தமிழர்பகுதியில் நடந்த சம்பவம் (படங்கள்)
கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியின் பாடசாலை வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவமானது, நேற்று மாலை (10) இடம்பெற்றுள்ளதுடன், இச் சம்பவத்தில் பெறுமதி வாய்ந்த பல மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகி்ன்றது.
இந்நிலையில் பாடசாலை பழைய மாணவர்கள், அதிபர், ஆசிரியர், காவல்துறையினர் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணியில் ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு: உண்மைகள் மறைக்கப்படுமா..! (படங்கள்)
கடும் வறட்சியும் வெப்பமும்
சம்பவம் தொடர்பில், காவல்துறையினர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்து தீ விபத்து இடம்பெற்று வருதாகவும் மக்கள் அநாவசியமாக தீ வைப்பதினை தவிர்த்துக் கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.
மேலும், இலங்கையில் தற்பொழுது கடும் வறட்சியும் வெப்பமும் கடும் காற்றும் அதிகரித்து காணப்படும் நிலையில் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.