ஈரானுக்கு மற்றொரு பேரிழப்பு : இஸ்ரேல் விமான தாக்குதலில்10 தளபதிகள் பலி
சிரியாவின் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) 11 தளபதிகள் கொல்லப்பட்டதாக சவுதி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல் சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திப்பதற்காக ஈரானிய புரட்சிகர காவலர் படையின் தளபதிகள் விமான நிலையத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தில்
எனினும் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெள்ளிக்கிழமை வெளியான செய்திகளை ஈரானிய புரட்சிகர காவலர் படையின் செய்தித் தொடர்பாளர் சர்தார் ரம்ஜான் ஷெரீப் மறுத்தார்.ஈரானிய ஊடகங்களை மேற்கோள் காட்டி, அத்தகைய கூற்றுக்கள் "ஆதாரமற்றவை" என்று அவர் கூறினார்.
வியாழன் மாலை இஸ்ரேல், தெற்கு சிரியா மற்றும் டமாஸ்கஸுக்கு அருகில் உள்ள தளங்களை இரண்டு தனித்தனி அலைகளில் வான்வழித் தாக்குதல்களுடன் குறிவைத்ததாக சிரிய ஊடகங்களும் கூறின.
முன்னதாக முக்கிய தளபதி பலி
தாக்குதலின் போது டமாஸ்கஸ் பகுதியில் சிரிய வான் பாதுகாப்புகள் செயல்படுத்தப்பட்டன. இஸ்ரேலால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல் "ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய கோலன் குன்றுகளில்" இருந்து வந்ததாக சிரிய இராணுவ ஆதாரம் ஒன்றை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வார தொடக்கத்தில், டமாஸ்கஸ் அருகே கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவலர் படையின் மௌசவி கொல்லப்பட்ட நிலையில் அதற்கு இஸ்ரேல் விலையை செலுத்தும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |