ட்ரம்பை கண்டுகொள்ளாத கிம் ஜோங் : பலமுறை பேச முயன்றும் தோல்வி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதல்முறை பதவி வகித்த போது, 2019 ஆம் ஆண்டு வட கொரியா சென்றார். அங்கு அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை சந்தித்து பேச்சவார்த்தை நடத்தினார். ஆனால் அணுஆயுத திட்டத்தை கைவிட மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
அதன் பிறகு அமெரிக்கா உடனான உறவை கிம் ஜோங் உன் விரும்பவில்லை. இந்நிலையில் 2ஆவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்ப் வட கொரியாவுடன் மீண்டும் உறவை ஏற்படுத்த முயன்று வருகிறார்.
தகவலின்படி, கிம் ஜோங் உன்னுடன் பேசுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும் ஆனால் எந்த பதிலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடிதம்
அதிகாரப்பூர்வ தொலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் தொடர்பு கொள்ள முயன்றும் பதில் இல்லையாம். கண்டுகொள்ளாத கிம் ஜோங் உன் கண்டுகொள்ளாததால், அவருக்கு கடிதம் எழுத ட்ரம்ப் முடிவு செய்தார். அந்த கடிதத்தை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை சபையின் வடகொரிய அலுவலகம் மூலம் ஒப்படைக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் திட்டமிட்டனர்.

அதன்படி அமெரிக்க அதிகாரிகள் சிலர் வடகொரியா அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த வடகொரிய தூதர் ஒருவரிடம் ட்ரம்ப் எழுதிய கடிதத்தை வழங்கியுள்ளனர்.
ஆனால், அந்த கடிதத்தை வடகொரிய தூதர் திறந்து கூட பார்க்கவில்லை என்றும் பின்னர் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தின் போது அமெரிக்க பிரதிநிதி முன்னிலையில் அந்த கடிதத்தை வைத்து விட்டு சென்றுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |