ரஷ்ய அதிபருக்கு கிம் ஜொங் உன் கொடுத்த உயிருள்ள பரிசு!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு (Vladimir Putin) வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன் (Kim Jong Un) ஒரு சோடி பங்சன் நாய்களை பரிசாக வழங்கியுள்ளார்.
பியோங்யாங்கில் (Pyongyang) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இரு தலைவர்களும் பல்வேறு பரிசுகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
விளாடிமிர் புடின் 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக வடகொரியாவுக்குச் சென்றுள்ள நிலையில் அவரை கிம் ஜொங் உன் பிரமாண்டமாக வரவேற்றுள்ளார்.
பங்சன் நாய்கள் பரிசு
இதன்போது, வடகொரியாவின் (North Korea) பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.
இந்த நிலையில், புடினுக்கு பங்சன் நாய்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.
கொரிய தீபகற்பத்தின் வடக்கே உள்ள மலைப்பகுதிகளில் பங்சன் இன நாய்கள் வாழ்கின்றன. அவை உறைபனி எதிர்ப்பு தோல் கொண்ட நாய்கள்.
சுற்றுப்பயணம்
அவைகளால் பாரிய விலங்குகளை கூட தாக்க முடியும். கொரியாவில் அவை வேட்டை நாய்களாக பயன்படுத்தப்படுகின்றன.
புடின் இந்த பயணத்தில் வட கொரியா மற்றும் வியட்நாம் ஆகிய இரண்டு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |