கிண்ணியாவில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்- பெறுமதியான அலைபேசியும் பறிமுதல்!
கிண்ணியாவுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு அலைபேசியும் பறிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டதோடு, அறுபதாயிரம் ருபாய் பொறுமதியான அலைபேசியும் பறிக்கப்பட்டது.
குறித்த சம்பவத்தை செய்தியாக்கச் சென்ற ஊடகவியலாளர் அப்துல் சலாம் யாசீன் என்பவரின் அறுபதாயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசியே போராட்டக்காரர்களால் பறிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது அமைதி இன்மையை ஏற்படுத்த்திய கும்பலினால் இரண்டு ஊடகவியலாளர்களால் சேகரிகப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டது.
இதன்போது ஊடகவியலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தலும் ஏற்பட்ட நிலையில் உயிர் தப்பி ஒடி சென்றுள்ளனர். இது குறித்து கிண்ணியா காவல் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
கிண்ணியாவில் நேற்றைய தினம் இளைஞர் குழு ஒன்றினை அரசியல்வாதிகள் இருவர் இயக்கியதோடு, பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுவதற்கும் காரணமாக இருந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி இன்மைக்கு அரசியல் தலைவர்களே காரணம். அண்மைக்காலமாக செய்தி சேகரிக்கச் செல்கின்ற உடகவியலாளர்கள் தாக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.