கிவுல் ஓயா திட்டம் : தமிழ்க் கட்சிகளின் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் அரசாங்கம்!

Ilankai Tamil Arasu Kachchi Ramalingam Chandrasekar NPP Government
By Kanooshiya Jan 25, 2026 12:21 PM GMT
Report

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மறுத்துள்ளார்.

தமக்கான அரசியல் பாதை எது என்பது தமிழ் மக்கள் இன்று நன்கு அறிந்து வைத்துள்ளதாகவும் அதனால் தான் வரலாறு காணாத வகையில் வடகிழக்கில் கூட தங்களுக்கு ஆதரவு கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிவுல் ஓயா திட்டம், குறிப்பிட்ட ஒரு இனத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானதாக அல்லாது, தேசிய அபிவிருத்தி, விவசாய வளர்ச்சியை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு அரசாங்கத் திட்டம் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

நான் யாருடைய அழுத்தத்திற்கும் அடங்குபவன் அல்ல : மாமல்லபுரத்தில் விஜய் பகிரங்கம்

நான் யாருடைய அழுத்தத்திற்கும் அடங்குபவன் அல்ல : மாமல்லபுரத்தில் விஜய் பகிரங்கம்

தமிழ்க் கட்சிகள் 

தமிழ்க் கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின் படி, கிவுல் ஓயா திட்டம் பாரம்பரிய தமிழ்ப் பகுதிகளில் நில அபகரிப்பையும், மக்கள் தொகை மாற்றத்தையும் நோக்கமாகக் கொண்டதாக கூறப்படுகிறது.

கிவுல் ஓயா திட்டம் : தமிழ்க் கட்சிகளின் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் அரசாங்கம்! | Kivul Oya Project Tamil Parties Against

மேலும், உள்ளூர் மக்களின் சம்மதமின்றி திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்க மதிப்பீடுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர்


“ இந்த ஆட்சியின்கீழ் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எந்தவிதமான இடமும் இல்லை. அனைத்து மக்களையும் சமமாகக் கருதும் கொள்கையுடனேயே அரசாங்கம் செயல்படுகிறது.

தமிழ் மக்களின் நில உரிமைகளும், சமூக உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படும், எந்த ஒரு சமூகமும் அநீதிக்குள்ளாக்கப்பட அனுமதிக்கப்படமாட்டாது. சட்டத்துக்கு முரணான நில கையகப்படுத்தல்கள் எதுவும் இடம்பெறாது, திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உரிய சட்ட நடைமுறைகளின் கீழேயே மேற்கொள்ளப்படும்.

புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபு ஆபத்தானது : பாதுகாப்புத் துறைக்கு அதீத அதிகாரம்!

புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபு ஆபத்தானது : பாதுகாப்புத் துறைக்கு அதீத அதிகாரம்!

விவசாய உற்பத்தி 

மேலும், கிவுல் ஓயா திட்டத்தின் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய உற்பத்தி அதிகரிக்கப்படுவதோடு, ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு நிலையான நீர்ப்பாசன வசதி கிடைக்கும்.

கிவுல் ஓயா திட்டம் : தமிழ்க் கட்சிகளின் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் அரசாங்கம்! | Kivul Oya Project Tamil Parties Against

இந்த திட்டத்தை இன அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், நாட்டின் நீண்டகால அபிவிருத்தித் தேவையாகக் கருதி அணுக வேண்டும்.

மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் வடக்கில் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன.

அந்த காலகட்டங்களில் எல்லாம் அரசாங்கத்துடன் ஒட்டுனியாக இருந்த தமிழ் கட்சிகள் இன்று தமிழ் மக்களுக்கு நன்மை நடக்கும் பொழுது பொங்கி எழுகின்றன.

உள்ளுராட்சி சபை தேர்தலின் போது கூட அங்த காணி அளவீட்டில் அரசியல் சாயம் பூசி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

தன்னுடைய அரசியல் வாக்கு வேட்டைக்காக ஒரு உரிய வகையில் இடம்பெற இருந்த காணி அளவீட்டை குழப்பினார்கள். அதில் மற்றுமொரு அங்கமாகவே இந்த திட்டத்திற்கும் போர் கொடி தொடுக்கிறார்கள்.” என தெரிவித்துள்ளார்.

அரசின் கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிராக திரளும் தமிழ் கட்சிகள்!

அரசின் கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிராக திரளும் தமிழ் கட்சிகள்!

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்! ஆறு காவல்துறையினருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்! ஆறு காவல்துறையினருக்கு விளக்கமறியல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024