ரோகித், கோலியை அடுத்து மற்றுமொரு சிரேஷ்ட வீரருக்கும் அணியில் இடமில்லை
Rohit Sharma
Virat Kohli
KL Rahul
Indian Cricket Team
By Sumithiran
இந்திய ரி 20 அணியில் ரோகித் சர்மா, விராட் கோலியை அடுத்து மற்றுமொரு சிரேஷ்ட வீரரான கே.எல் ராகுலுக்கும் இடம் கிடைக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ரி 20 உலககிண்ணபோட்டியில் ராகுல் சிறப்பாக செயநற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.அவர் 06 போட்டிகளில் விளையாடி 120 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார்.
ஐபிஎல் போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை
அத்துட்ன் நடந்து முடிந்த 16 ஆவது ஐபிஎல் போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடவில்லை. இதனால்தான், இனி ரி 20 கிரிக்கெட்டில் கே.எல்.ராகுலை சேர்க்க வேண்டாம் என பிசிசிஐ தேர்வுக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாற்று வீரர்
இந்த நிலையில் ராகுலுக்கு மாற்று விக்கெட் காப்பாளராக இஷான் கிஷானை களமிற்க்க திட்டமிடப்பட்டுள்ளது.அவருக்கு துணையாக ஜிதேஷ் ஷர்மாசெயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
2ம் ஆண்டு நினைவஞ்சலி