கொரியன் பெண்களை போல் க்ளாஸ் ஸ்கின் வேண்டுமா! இந்த பொருள் இருந்தா போதும்
பொதுவாகவே பெண்கள் தங்களது சருமத்தை அழகாகவும், பொலிவாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள்.
இந்நிலையில், தற்போது கொரியன் பெண்களை பார்த்து அவர்களது அழகு குறிப்புக்களை பின்பற்றி வருகின்றனர்.
கொரியன் பெண்களின் சருமமானது பளிங்கு போன்று இருக்கும். முகத்தில் எந்தவொரு புள்ளியும் இல்லாமல் தெளிவாக வைத்திருப்பார்கள்.
கொரியன் பெண்களின் இரகசியம்
ஆகையால் தற்போதைய பெண்கள் கொரியன் பெண்களை போல் இருக்க வேண்டும் என்று எண்ணி பல க்ரீம்களையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
அவ்வாறான செயற்பாடுகளின் மூலம் பக்கவிளைவுகள் தான் ஏற்படகூடும்.
எனவே, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி இயற்கையான முறையில் கொரியன் பெண்களை போல அழகாகலாம் என பார்க்கலாம்.
அரிசி நீர்
அரிசி நீரானது கொரியன் அழகுசாதன பொருட்களின் முக்கிய பங்கு வகிக்கின்றது.அரிசி நீரானது அனைவரது வீட்டிலும் இலகுவாக கிடைக்கும் ஒரு திரவமாகும்.
இது சருமத்திற்கு மட்டுமல்லாமல் முடியின் வளர்ச்சிக்கும் உதவுகின்றது. அரிசி நீரை உங்கள் சருமத்திற்கு டோனராக பயன்படுத்தலாம்.
முகத்திற்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கும். துணியில் அரிசி தண்ணீரை நனைத்து உங்கள் முகத்தில் நன்கு தடவுங்கள்.இவ்வாறு தினமும் செய்து வர முகத்தில் மாற்றத்தை உணரலாம்.
சிறந்த பலன்
முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கும். எப்போது பயன்படுத்தும் ஃபேஸ் வாஷ் உடன் இந்த அரிசி தண்ணீரை கலந்து பயன்படுத்தி வர சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கலாம்.
இயற்கை முறையில் முகத்தை சிகப்பழகாக்க விரும்புபவர்கள் வாரத்திற்கு 2 முறை அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி முகத்தை மசாஜ் செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 7 மணி நேரம் முன்
