கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் யாழில் கைதான சந்தேகநபர்கள்!
Sri Lanka Police
Law and Order
Gun Shooting
By Theepan
கொட்டாஞ்சேனை கொலையில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் இன்று (08.11.2025) கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் பகுதியில் மூவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று (07.11.2025) கொட்டாஞ்சேனை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
முதற்கட்ட விசாரணை
குற்றவியல் கும்பல் உறுப்பினரான பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற "புகுடு கண்ணா"வின் தொடர்புடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவந்தது.

அவர் 43 வயதுடையவர் என்றும் கூறப்படுகிறது.
எனினும், முதற்கட்ட விசாரணையில் காரில் வந்த ஒரு குழு 9 மிமீ துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள் - கஜிந்தன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்