கொத்மலை அணை உடைந்ததாக பரவும் வதந்தி
கொத்மலை அணை உடைந்ததாக தற்போது வெளியாகி வரும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என தகவல்' வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தை நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பிலுள்ள பொறியியலாளர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
நிலவும் மழையினால் நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு 2 அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் வினாடிக்கு 80 கனமீற்றர் நீர் வெளியேற்றப்படுவதாகவும் அந்தப் பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
சைரன் ஒலி
நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படுவதற்கு முன்னர் சைரன் ஒலி எழுப்பப்பட்டதாகவும், இது சாதாரண நிலைமை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொத்மலை அணை உடைந்ததாகவும், அதனால் அணைக்குக் கீழ்ப்பகுதியில் வாழும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வந்தது.
இதன் காரணமாக அப்பிரதேச மக்கள் தற்போது மேடான பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |