இப்படிப்பட்ட தலைவர் முன் ஒருபோதும் தலைவணங்க மாட்டேன்! கொட்டஹச்சி அதிரடி
தான் இந்த நாட்டை அரசியல் படுகுழியில் தள்ளிய எந்தவொரு அரசியல் முன்னாலும் ஒருபோதும் தலைவணங்க மாட்டேன் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார்.
கொட்டஹச்சி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தலைவணங்குவது போலான ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வந்த நிலையில், அவரின் இந்த கூற்று வெளியாகியுள்ளது.
ஆணை வழங்கிய மக்கள்
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “புகைப்படத்தில் இருப்பது நான் அல்ல என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

எனக்கு எந்த மறைமுக அரசியல் பரிவர்த்தனைகளும் இல்லை. இந்த நாட்டை இந்த அரசியல் படுகுழியில் தள்ளிய அரசியல் தலைவர்களின் முன் நான் ஒருபோதும் தலைவணங்க மாட்டேன்.
எங்களுக்கு ஆணையை வழங்கிய, எங்களை நம்பி, இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய போராடும் அப்பாவி மக்களின் முன் தலைவணங்கும் அளவுக்கு நான் பணிவுடன் இருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        