விடாப்பிடியில் கோட்டாபய அரசு - ஹக்கீம் கடும் விசனம்
Death
Covid-19
Gotabhaya Rajapaksa
Rauf Hakeem
By Vasanth
அரசாங்கம் தனது பிடிவாதப் போக்கை தொடர்ச்சியாகக் கடைப்பிடித்துவரும் நிலைப்பாட்டிலிருந்து மாறாமல், கொவிட் – 19 தொற்றால் மரணிப்பதை காரணம் காட்டி, ஜனாஸாக்கள் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்யப்படுவதை தவிர்த்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினருர் ரவூப் ஹக்கீம் விசனம் வெளியிட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில், கொவிட் – 19 தொற்றினால் மரணிப்பவர்கள் எனக் கூறப்படுகின்ற ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்யத் தீர்மானித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சரின் அக்கருத்து தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசும்போதே ஹக்கீம் இதனை தெரிவித்தார்.