கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் : காவல்துறைக்கு அறிவுரை கூறும் பிரதமர்
கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் காவல்துறை குழு மற்றும் சிறுமியின் பெற்றோருடனான ஒரு சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று (10) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பாடசாலை மற்றும் மேலதிக வகுப்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பாரபட்சமற்ற, முறையான மற்றும் மிக விரைவான விசாரணையை நடத்துமாறு பிரதமர் காவல்துறை விசாரணைக் குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
எடுக்கப்பட்ட நடவடிக்கை
இந்த சம்பவம் பதிவாகியது முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முறையாக இடம்பெற்றனவா என்பது குறித்து கல்வி அமைச்சின் மூலம் உள்ளக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் இவர்களிடம் தெரிவித்தார்.
சிறுவர் பாலியல் வன்கொடுமை தொடர்பான சம்பவங்கள் குறித்து தலையிட வேண்டிய அரச நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மிகவும் பலவீனமான நிலையில் உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, தகாத முறைக்கு உடன்படுத்தப்பட்ட பிள்ளைக்கு நேர்மறையான பதில் வழங்கப்படுவதில்லை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளமையினால், இந்த பொறிமுறையை கண்காணித்து அதை நெறிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க சிறுவர் நல மருத்துவ நிபுணர் வைத்தியர் அஸ்வினி பெர்னாண்டோ தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு பிரதமரினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
