போர் நிறுத்தத்தின் எதிரொலி : மீளத் திறக்கப்பட்டது பாகிஸ்தானின் வான் எல்லை
தற்காலிகமாக மூடப்பட்ட பாகிஸ்தானின் வான் பரப்பு மீளவும் திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் (Pakistan) உள்ள 3 விமானப்படை தளங்களை குறி வைத்து இந்தியா இன்று (10.05.2025) தாக்குதல் நடத்தியது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருந்த நிலையில் இரு நாடுகளும் பரஸ்பரம் தொடர்ச்சியான தாக்குதல்களையும் மேற்கொண்டது.
பாகிஸ்தானின் வான் பரப்பு
மேலும், பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படைத்தளம், பஞ்சாப் சார்கோர்ட்டில் உள்ள ரபீக் விமானப்படைத்தளம், இஸ்லாமாபாத்தின் முடீர் பகுதியில் உள்ள விமானப்படைத்தளத்தை குறிவைத்து இந்தியா தாக்குதல் மேற்கொண்டது.
இதன் எதிரொலியாக பாகிஸ்தான் தங்கள் நாட்டு வான்பகுதியை தற்காலிகமாக மூட நடவடிக்கை மேற்கொண்டதுடன் , வான் பரப்பில் பயணிகள் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட பாகிஸ்தானின் வான் பரப்பு அனைத்து வணிக மற்றும் இராணுவ விமானங்களுக்கும் திறந்துள்ளது.
பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் (PAA) குறித்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட நிலையில் வான் எல்லைகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
