கிரிஷ் வழக்கு : ஜானகி சிறிவர்தனவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிரிஷ் குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவின் விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதி வரை அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைக்காக ஜானகி சிறிவர்தன இன்று காலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது
அத்துடன் கிரிஷ்’ ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நவம்பர் 20ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை குறித்த விவகாரம் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் இன்று சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு 70 மில்லியன் ரூபாய் இலஞ்சம் வழங்கப்பட்டமை தொடர்பாக கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன கடந்த செப்டெம்பர் 24 ஆம் திகதி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ராஜபக்சர்களின் உளவாளி என்ற எதிர்வினை: தமிழர்கள் கற்க வேண்டிய இஸ்ரேலின் வியூகங்கள் - நிராஜ் டேவிட் வெளிப்படை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சலே உள்ளிட்ட நால்வரின் திட்டமிட்ட செயற்பாடு: நீதிமன்றில் சி.ஐ.டி பகிரங்கம்