திருமண நிகழ்வில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்ட நிலை
srilanka
kuliyapitiya
happy married life
By Vasanth
குளியாபிட்டியவில் உள்ள கொங்கொல்லா பகுதியில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட100 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
திருமணத்தில் மணமகனின் தந்தை கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குளியாபிட்டி சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
குளியாபிட்டி போதனா மருத்துவமனையின் பணியாளரான இவருக்கு கோவிட் -19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
வைரஸ் தொற்று இருந்தநிலையிலும் திருமணம் நடைபெற்றதால் திருமண விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டதாக சுகாதார மருத்துவ அதிகாரி (எம்ஓஎச்) தெரிவித்தார்.
அதன்படி, 35 வீடுகளைக் கொண்ட குடும்பத்தினரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி