குமாரபுரம் படுகொலை : நீதியற்று கடக்கும் இன்னொரு ஆண்டு
1996ஆம் ஆண்டு, திருகோணமலை (Trincomalee) குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 29 ஆண்டுகளாகின்றன.
வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர்.
இதன்போது 26 (சிறுவர்கள், பெண்கள் உட்பட) பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 20 வருடங்களாக இடம்பெற்றுவந்த நிலையில், 2016ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினர் அனைவரும் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தின் சிங்கள ஜூரிகள் கொண்ட சபையால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இத்தனைக்கும் படுகொலைக்கு உள்ளானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை அடையாளம் காட்டியிருந்தனர்.
எனினும், அவர்களுக்கு நீதிகிடைக்கவில்லை. சந்திரிக்கா குமாரதுங்க நிறைவேற்று ஜனாதிபதியாகவிருந்த காலத்திலேயே மேற்படி குமாரபுரம் படுகொலை இடம்பெற்றிருந்தது.
29 ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு ஐபிசி தமிழ் தரும் காணொளி பதிவு கீழே தரப்பட்டுள்ளது.
![புதிய அரசியலமைப்பாக்க முயற்சியை எதிர் கொள்ள தமிழ்த் தேசமாக ஒன்றிணைதல் : விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்](https://cdn.ibcstack.com/article/ffcc0882-09b4-4d88-848a-2a259133da4d/25-67ab352c37c55-sm.webp)
புதிய அரசியலமைப்பாக்க முயற்சியை எதிர் கொள்ள தமிழ்த் தேசமாக ஒன்றிணைதல் : விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)