மீண்டும் சேவையை ஆரம்பித்த குமுதினிப் படகு
நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான குமுதினிப் படகு இன்று (24) முதல் மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.
குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் திருத்த வேலைகளின் பின்னர் குறிகட்டுவானில் தரித்துவிடப்பட்டிருந்தது.
நேற்று (23) மாலை குமுதினிப் படகு குறிகட்டுவானில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு நெடுந்தீவு சென்று தரித்ததுடன் இன்று (24) காலை 7 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கிப் புறப்பட்டு அங்கிருந்து மீண்டும் நெடுந்தீவுக்கு பயணித்தது.
1968 ஆம் ஆண்டு முதல்
குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவு பயணிகளுக்கான கடல்வழிப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட குமுதினிப் படகு அடிக்கடி செயலிழந்த நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குமுதினி படகின் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை குமுதினிப் படகு 1968 ஆம் ஆண்டு முதல் யாழ்.நெடுந்தீவிற்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்