குசல் மெண்டிஸ் விசா விவகாரம் : வெளியாகியுள்ள தகவல்
ரி20 உலகக் கோப்பைக்காக அமெரிக்கா (America) செல்வதற்கான விசா அனுமதியை பெற்று இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் (Kusal Mendis ) இறுதியாக அமெரிக்கா செல்லவுள்ளார்.
எஞ்சிய குழுவினர் ஏற்கனவே அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றிருந்த போதிலும் மெண்டிஸின் விசா முழுமையடையாத காரணத்தால் கொழும்பில் (Colombo) உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பல நாட்கள் தடுத்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தூதரகத்திற்கு தேவையான பல ஆவணங்களை மெண்டிஸ் சமர்ப்பிக்க தவறியதே இந்த தாமதத்திற்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை
அத்தோடு, குசல் மெண்டிஸின் விசா மறுக்கப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா (Ashley de Silva) மெண்டிஸின் விசா மறுக்கப்படவில்லையெனவும் மற்றும் அவர் பயிற்சி ஆட்டங்களுக்கு முன்னர் அணியில் இணைவாரெனவும் தெரிவித்திருந்தார்.
2024 ஆம் ஆண்டு மே 28 ஆம் திகதி தொடங்கும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இலங்கை இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது.
முதல் பயிற்சி ஆட்டம்
நெதர்லாந்துக்கு எதிரான அவர்களின் முதல் பயிற்சி ஆட்டம் மே 28 அன்று புளோரிடாவில் உள்ள ப்ரோவர்ட் கவுண்டி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
மேலும், அதன்பிறகு மே 31ஆம் திகதி அதே மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |