குவைத் மன்னர் ஷேக் நவாப் மறைவு :உலக நாடுகள் இரங்கல்!
குவைத் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா தனது 86வது வயதில் காலமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எண்ணெய் வளம் மிக்க குவைத்தின் மன்னர் மூன்றாண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில் நேற்று (16)காலமாகியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம், ஷேக் நவாஃப், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த குவைத் மன்னர்
அவருக்கு என்ன உடல்நலப் பிரச்சினை என தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் அவர் காலமாகியுள்ளார் என குவைத் நீதிமன்றத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவரின் மறைவிற்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குவைத் மன்னராக இருந்த அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் குறைவு காரணமாக 2020ஆம் ஆண்டு காலமானதையடுத்து பட்டத்து இளவரசராக இருந்து வந்த ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா மன்னராக பொறுப்பேற்றார்.
இப்போது தற்போதைய பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-சபா மன்னராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |