உக்ரைனில் சிறுவர் வைத்தியசாலை மீது ரஷ்யா மிலேச்சத்தனமான தாக்குதல் : பலர் பலி
உக்ரைன்(ukraine) தலைநகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்று இன்று (08) காலை ரஷ்ய(russia) ஏவுகணைத் தாக்குதலில் கடுமையாக சேதமடைந்துள்ளது.
உக்ரைனின் மிகப்பெரிய ஓக்மடிட் (Okhmatdyt) குழந்தைகள் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பெரியவர்கள் உட்பட உக்ரைன் முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
20 குழந்தைகள் சிகிச்சை
இன்று காலை ரஷ்ய ஏவுகணையால் தாக்கப்பட்ட ஓக்மடிட் குழந்தைகள் மருத்துவமனை விடுதியில் சுமார் 20 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் உக்ரைனிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
கீவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவர் லெசியா லிசிட்சியா, ஏவுகணை தாக்கிய தருணத்தைப் பற்றி தெரிவிக்கையில்,
இது "ஒரு படத்தில் இருப்பது போல்" "பெரிய ஒளி, பின்னர் ஒரு பயங்கரமான ஒலி" என்று விவரித்தார். "மருத்துவமனையின் ஒரு பகுதி அழிக்கப்பட்டது, மற்றொன்றில் தீ ஏற்பட்டது. அது உண்மையில் மிகவும் சேதமடைந்துள்ளது - ஒருவேளை மருத்துவமனையின் 60-70%," பகுதி அழிக்கப்பட்டது என்று அவர் கூறுகிறார்.
ஒரு பெரிய மருத்துவமனை
புற்றுநோய் சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உட்பட பல செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஒரு பெரிய மருத்துவமனை ஓக்மடிட் என்று லிசிட்சியா தெரிவித்தார்.
மற்ற இடங்களில், மத்திய உக்ரைனிய நகரமான Kryvyi Rih இல் நடந்த தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். அங்குள்ள இராணுவ நிர்வாகத்தின் தலைவரின் கருத்துப்படி, கிழக்கு நகரமான Pokrovsk இல் மேலும் மூன்று பேர் மற்றும் Dnipro இல் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
மோடி வந்துள்ள நிலையிலும் தாக்குதல்
போலந்துக்கு விஜயம் செய்துள்ள உக்ரைன் அதிபர் வெலோடிமிர் ஜெலென்ஸ்கி பதிலடி கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மொஸ்கோ வந்தடைந்துள்ள நிலையில், கிரெம்ளினில் அதிபர் விளாடிமிர் புடினுடன் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |