யாழில் சுற்றுலா மேம்பாடு எனும் போர்வையில் காணி அபகரிப்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில். 600 ஏக்கர் காணிகளை சுற்றுலா மேம்பாடு எனும் போர்வையில் அபகரிக்கும் முயற்சியை கைவிடுமாறு மணக்காடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணக்காட்டு பகுதியில் கற்கோவளத்திற்கும் மணல்காட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் 300 ஏக்கர் காணியும், மணக்காட்டுக்கும் பொற்பதி கிராமத்துக்கும் இடைப்பகுதியில் 300 ஏக்கர் காணியும் சுற்றுலா தேவைகளுக்காக அபகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
இதனை உடனடியாக கைவிடுமாறு மணக்காடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடுமையான எதிர்ப்பு
இன்றைய தினம் (25.10.2025) மணக்காடு கிராம மட்ட அமைப்புகள் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளனர்.

மணக்காடு கிராமத்திலுள்ள மக்கள் பலருக்கு குடியிருக்க காணியில்லாத நிலையில் தனியார்களுக்கு இவ்வாறு காணிகளை வழங்கும் முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதனை தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தொடர்புபட்ட தரப்புகள் உரிய கவனம் எடுத்து குறித்த 600 ஏக்கர் காணிகள் பொறுப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்