25 வருட போராட்டத்தின் பின் காணி உரிமத்திற்கான பெயர் விபரம் வெளியீடு
வவுனியா (Vavuniya) - பண்டாரிக்குளம் பகுதியில் வசிக்கும் 83 குடும்பங்களுக்கான காணி உரிமத்துக்கான பத்திரங்கள் வழங்குவதற்கான பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது.
குறித்த குடும்பங்பகளுக்காக காணி உரிமம் கிடைக்கப்பெறாத நிலையில் 25 வருடங்களாக அவற்றை பெறுவதற்கு காணி உரிமையாளர்கள் பல்வேறு தரப்பினர்களுடன் முயற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த காணி உரிமையாளர்களுக்கான பத்திரங்களை வழங்குவதற்கான பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் பிரதேச செயலத்திற்கு கிடைக்கப்பெற்று இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
25 வருட போராட்டம்
இதன் காரணமாக 25 வருடமாக தமது காணிக்கான உரிமையை பெறுவதற்காக போராடியதன் பலனை அடைந்திருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் குறித்த காணிக்கான உரிமையை பெறுவதற்கு எந்த அரசியல்வாதிகளும் தமக்கு துணையாக இருக்கவில்லை எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்