மாதகலில் நாளை கடற்படைக்கு காணி அளவீடு- போராட்டத்திற்கு அழைப்பு
people
protest
navy
mathagal
By Sumithiran
மாதகலில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சிக்காக காணி அளவீட்டு பணிகள் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மாதகல் கிழக்கில் 3 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் நாளைய தினம் திங்கட்கிழமை காலை 09 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேவேளை மாதகல் மேற்கில் 16 ஏக்கர் காணி அளவீட்டு பணிகள் முற்பகல் 11 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த காணி அளவீட்டு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாளை குறித்த காணிகளுக்கு முன்பாக காணி உரிமையாளர்கள் , அரசியல்வாதிகள் , அப்பகுதி மக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் எனவும் , தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அனைத்து தரப்பினரிடமும் காணி உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்