கண்டியில் மீண்டும் நிலச்சரிவு : மக்கள் வெளியேற்றம்
Kandy
Landslide In Sri Lanka
Floods In Sri Lanka
By Sumithiran
டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தம் படிப்படிப்பாக சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் மீண்டுமொரு இயற்கை அனர்த்தம் பதிவாகியுள்ளது.
இதன்படி கண்டி, ஹுன்னஸ்கிரிய நகருக்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
3 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று(18) காலை இப்பகுதியில் பெய்த மழையுடன் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படும் குடும்பங்கள்
நிலவும் ஆபத்து காரணமாக, அருகிலுள்ள 2 தங்குமிடங்களில் இருந்து 90 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குருநாகல், பதுளை, மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் நீர்மட்டம்: மகாவலி ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
4 நாட்கள் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
6 நாட்கள் முன்
9ம் ஆண்டு நினைவஞ்சலி