ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை தியகல பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
டித்வா சூறாவளி தாக்கம் ஏற்பட்ட காலத்தில் வட்டவளை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்ட இடத்தில், முன்பு சரிந்து விழுந்த மண்மேடு அகற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் மே 10 ஆம் திகதி பெய்த கடும் மழையினால் மீண்டும் மண்மேடு ஒன்று வீதிக்கு சரிந்து விழுந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையினர் கோரிக்கை
இதன் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து ஒரு வழியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், வீதிக்கு சரிந்து விழுந்துள்ள மண்மேட்டை அவசரமாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்தின் செயற்பாட்டு பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |