11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு
sri lanka
people
landslide
By Shalini
நாட்டில் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டு இருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, பதுளை, நுவரெலியா, குருநாகல் மற்றும் காலி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையே நீடிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை நிலவும் பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.