விவசாயிகளுக்கு கிடைத்த மகிழ்ச்சி தகவல்! 10 ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படவுள்ள உரத்தின் விலை
Sri Lanka
Ministry of Agriculture
By pavan
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் யூரியா உட்பட்ட பல உர வகைகளின் விலையினை குறைப்பதற்கு உர இறக்குமதி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கமைய 50 கிலோகிராம் எடையுடைய யூரியா ஒரு மூடையின் விலை 10 ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
அந்தவகையில், 50 கிலோகிராம் நிறையுடைய யூரியா உரம் ஒரு மூடை 29 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
தேயிலை உரவகைகளின் விலை
அத்துடன் தேயிலை பயிர்ச்செய்கைக்கான பல்வேறு உரவகைகளின் விலையானது ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக உர இறக்குமதியாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் நந்தன சமரகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, உலக சந்தையில் உரத்திற்கான விலை குறைவடைந்தமையினாலேயே உரத்தின் விலை குறைக்கப்பட்டமைக்கான காரணமாகும் என நந்தன சமரகோன் மேலும் தெரிவித்துள்ளார்

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி