ஜனாதிபதி நிதியத்திற்கு லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் மில்லியன் ரூபா நன்கொடை
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (Lanka IOC) நூறு மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் இந்நாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் (Nandika Sanath Kumanayake) கையளித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (06) இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக செயலாளர்
இந்த நன்கொடை, லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் இலங்கையின் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார துறைகளுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
