64 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்! அமெரிக்க படைகளிடம் சிக்கியதாக பரபரப்பு செய்தி?
இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களில் இருந்து 64 பேர் சட்டவிரோதமாக தப்பிச் சென்றுள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இவர்கள் படகு மூலமாக, தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்று மாலைதீவு அருகே சர்வதேச பொலிஸாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தமிழக கியூ பிரிவு பொலிஸாா் விசாரணை நடத்தி வருகின்றனர். மாலைதீவு மற்றும் மொரீஷஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் மோசமான வானிலை காரணமாக இவர்கள் சென்ற படகு சா்வதேச பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மாலைதீவு அருகே உள்ள டிக்கோ காா்சியா என்ற தீவு அமெரிக்கா நாட்டின் வசம் உள்ளது. அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தீவில் அத்துமீறி இவா்களின் படகு நுழைந்ததாகக் கூறி அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
இதுவரை இந்தியத் தூதரகத்துக்கு இது குறித்து எந்தவிதமான தகவலும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. .
தற்போது வரை இந்த 64 போ் யாா் என்பதை உளவுத்துறை பொலிஸாரால் உறுதி செய்ய முடியவில்லை. அதேநேரத்தில் கடற்பரப்பில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படும் 64 நபா்களின் விவரங்களைப் பெறுவதற்காக தமிழக காவல்துறை சா்வதேச பொலிஸாா் உதவியை நாடி இருக்கிறது.