யாழ். வடமராட்சி பகுதியில் மீட்கப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்கள்
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி பகுதியில் 200 கிலோ எடையுடைய பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருட்கள் வடமராட்சி - கிழக்கு, வத்திராயன் பகுதியில் இன்று (4) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து காவல்துறை விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி கடற்படையின் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
மேலதிக சட்ட நடவடிக்கை
இந்த தேடுதலின் போது கடத்திச் செல்வதற்காக தயார் நிலையில் காணப்பட்ட 123 கிலோ கேரள கஞ்சா முதலில் மீட்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேலும் கஞ்சா மீட்கப்பட்டது. மொத்தமாக 200 கிலோ கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது.
எனினும் இந்த சம்பவம் தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
மேலும், மீட்கப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செய்தி - பு.கஜிந்தன்
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 1 மணி நேரம் முன்
