பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ தீர்த்தமாடிய யாழ். வல்லிபுர ஆழ்வார்
Sri Lankan Tamils
Jaffna
Hinduism
By Thulsi
யாழ். ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயப் பெருந்திருவிழாவின் சமுத்திரத் தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெற்றது.
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்தம் நேற்று திங்கள் (06) மாலை வடமராட்சி கற்கோவளம் கடற்பகுதியில் இடம்பெற்றது.
கடந்த ஒன்பதாம் மாதம் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து உற்சவம் நடைபெற்று வருகிறது.
பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள்
16 ஆம் நாள் உற்சவமாகிய தேர்த்திருவிழா நேற்று திங்கட் கிழமை (06) மாலை 5 மணியளவில் தீர்த்த திருவிழா இடம்பெற்றது.
இன்று செவ்வாய்க்கிழமை (07) காலை கேணித் தீர்த்தமும் மாலை 6.00 மணியளவில் கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.
சமுத்திரத் தீர்த்தோற்சவத்தில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்