அமெரிக்க வரலாற்றில் சுகாதார ஊழியர்களின் மிகப்பெரிய வேலைநிறுத்தம்
அமெரிக்காவில் 75,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்க ஊழியர்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநரான கைசர் பர்மனென்ட் (Kaiser Permanente) இல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்க வரலாற்றில் சுகாதார ஊழியர்களின் மிகப்பெரிய வேலைநிறுத்தம் இது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஐந்து அமெரிக்க மாநிலங்கள் மற்றும் வாஷிங்டனைச் சேர்ந்த செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிக ஊதியம் மற்றும் பணியாளர் பற்றாக்குறையைக் கோரி வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர்.
ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள்
வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, தொழிற்சங்கங்களுக்கும் கைசர் பெர்மனெண்டிற்கும் இடையிலான ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்ததை அடுத்து, மூன்று நாள் வேலைநிறுத்தத்தால் கிட்டத்தட்ட 13 மில்லியன் நோயாளிகள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
வேலை நிறுத்தத்தின் போது மருத்துவமனைகள் மற்றும் அவசரகால வசதிகள் திறந்திருக்கும் என கூறப்படுகிறது.