பதுங்குமிடமொன்றில் மகனுடன் சேர்த்து தாக்கப்பட்ட ஈரானியப் பாதுகாப்புத் தலைவர்
Iran
Iran-Israel War
Iran-US Conflict
By Jaso
பதுங்குமிடமொன்றில் அலி லாரிஜானி தனது மகனுடன் இருந்தவேளை தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லாரிஜானி "ஒழிக்கப்பட்டுவிட்டார்" என்றும், ஈரானின் தலைமையை "தொடர்ந்து வேட்டையாடுமாறு" தானும் பிரதமரும் இராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் குறிப்பிட்டார்.
இறுதியாக பொதுவெளியில் தோன்றிய அலி லாரிஜானி
கடந்த வெள்ளிக்கிழமை குட்ஸ் தினப் பேரணிகளில் பங்கேற்றபோது, ஈரானியப் பாதுகாப்புத் தலைவர் பொதுவெளியில் காணப்பட்டார்.

அவர் ஈரானின் முன்னாள் அணுசக்திப் பேச்சுவார்த்தையாளராகவும், போரின் முதல் நாளிலேயே கொல்லப்பட்ட மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் நெருங்கிய கூட்டாளியாகவும் இருந்தார்.
அவரது மரணம் குறித்து ஈரானிடமிருந்து எந்த உறுதிப்படுத்தலும் வரவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |