ஈரானின் மிக முக்கிய புள்ளியை வீழ்த்தியது இஸ்ரேல்!
ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான அலி லாரிஜானி கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் அறிவித்துள்ளார்.
ஈரானின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரியின் மரணம் குறித்து தனக்கு சற்று முன்புதான் தகவல் கிடைத்ததாக கட்ஸ் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
லாரிஜானி கொலை
நேற்று திங்கட்கிழமை இரவு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள்(IDF) திங்கட்கிழமை மாலை ஈரானின் முக்கிய நகரங்களான தெஹ்ரான், ஷிராஸ் மற்றும் தப்ரிஸ் ஆகியவற்றை குறிவைத்து பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளன.
முக்கிய இலக்குகள்
இஸ்ரேல் இராணுவம், இந்த தாக்குதல்களின் முக்கிய இலக்குகள் ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் மற்றும் கட்டளை மையங்கள் என தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், இஸ்ரேல் இராணுவத் தலைமை அதிகாரியான இயால் ஜமீர், நேற்று இரவு ஈரானில் முக்கியமான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |