சூடுபிடிக்கும் ஊடகவியலாளர் லசந்த படுகொலை - சபையில் சஜித் எழுப்பிய கேள்வி
லசந்த விக்ரமதுங்கவின் (Lasantha Wickrematunge) படுகொலை தொடர்பில் அரசாங்கம் தலையிட்டு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (6.2.2024) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நான் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி பிரதமரிடம் கேள்வி எழுப்பியிருந்தேன்.
வெளிப்படையான விசாரணை
இத்தகைய தருணத்தில், இது தொடர்பாக அண்மைக்காலமாக அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன?
இது தொடர்பாக வெளிப்படையான விசாரணையை நடத்தி, அவர்களது குடும்பத்தினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நீதி நியாத்தை நிலைநாட்டி, கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
மேலும் கொழும்பு துறைமுகத்தில் காணப்படும் கொள்கலன் பரிசோதனை நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம் ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி மூலம் அதிக வருமானம் ஈட்டும் எம்மைப் போன்ற நாட்டிற்கு நல்லதல்ல.
இது தொடர்பில், ‘கட்டாயம் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என சிவப்பு முத்திரை’ பொறிக்கப்பட்ட 323 கொள்கலன்களை விடுவித்தமையை யார் பொறுப்பேற்பது? ஏன் அவ்வாறு விடுவிக்கப்பட்டன என்றும் அரசாங்கத்திடம் அவர் கேள்வி எழுப்பினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)