வரலாறு காணாத டெங்கு நோயின் தாக்கம் - மருந்துகளால் எழுந்துள்ள புதிய சிக்கல்
Colombo
Sri Lanka
Dengue Prevalence in Sri Lanka
Death
By Dharu
நாட்டில் வரலாறு காணாத வகையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் குறிப்பிட்ட சில நாட்களில் 4387 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்களில் 32.5 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மருந்துகளால் பல்வேறு சிக்கல்
கடந்த 10 மாதங்களில் மாத்திரம் 20334 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, டெங்கு நோயினால் 145 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நாட்களில் பதிவாகும் காய்ச்சலின் அறிகுறிகளும் டெங்குவின் அறிகுறிகளும் பெரும்பாலும் ஒத்திருப்பதால், நோயின் நிலையைத் தீர்மானிக்காமல் உட்கொள்ளும் மருந்துகளால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்