விளைவுகளை ராஜபக்சக்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்..! ரணிலுக்கு சஜித் எச்சரிக்கை

Ranil Wickremesinghe Sajith Premadasa
By Kiruththikan Nov 24, 2022 09:07 AM GMT
Kiruththikan

Kiruththikan

in அரசியல்
Report

மக்கள் கருத்துக்கு செவிசாய்க்காததன் விளைவுகளை ராஜபக்சக்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித், அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், தேர்தலை நடத்த மாட்டோம் என அதிபர் கூறியதில் தமக்கு ஆச்சரியமில்லை எனவும், தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படாமல் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு வந்து, முன்னாள் அதிபரின் விருப்பத்தின் பேரில் பிரதமராகி, பின்னர் நாடாளுமன்ற பெரும்பான்மையின் விருப்பத்தின் பேரில் அதிபரானவர் என்பதனால் அவருக்கு தேர்தலொன்றின் பெறுமதி புரியவில்லை எனவும்,மக்களின் வாக்குரிமை தொடர்பில் அவருக்கு நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அவரது பேச்சுக்கள் குறித்து தான் பொருட்படுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.

மக்கள் போராட்டத்தினாலே விரட்டியடிப்பு

விளைவுகளை ராஜபக்சக்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்..! ரணிலுக்கு சஜித் எச்சரிக்கை | Learn The Consequences From The Rajapakses

69 இலட்சம் வாக்குகளைப் பெற்று அதிபரானவர், 68 இலட்சம் வாக்குகளைப் பெற்று பிரதமரானவர், நிதியமைச்சரானவர் உள்ளிட்டோர்,திடீரென இருந்த இடத்தைக் கூட மறந்து வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது தேர்தலினால் அன்றி மக்கள் போராட்டாத்தினாலையே விரட்டப்பட்டதாகவும்,எனவே தற்போதைய அதிபரும் கூட இதனை மறந்துவிடக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்த மாட்டோம் என அதிபர் கூறியதும் அதற்கு ஆதரவாக சபையில் இருந்த அடிமைகளின் ஒரு பகுதியினர் ஆரவாரம் செய்தனர் எனவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் சந்தர்ப்பத்தில் அவ்வாறு ஆரவாரம் செய்வதை அங்கீகரிக்கவில்லை எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,நாடாளுமன்றத்தில் சிலர் ஒரு அடிமைத்தனத்தில் இருந்து இன்னுமொரு அடிமைத்தனத்திற்கு மாறியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

அதிபரின் உரைக்கு ஒரு சில அடிமைகள் ஆரவாரம் காட்டினாலும் நாட்டின் 220 இலட்சம் மக்கள் மிகவும் வருத்தம் கொண்டதாகவும்,ஜனநாயகத்துக்கான மக்கள் சக்தி விரைவில் உருவாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள மாறுபட்ட நிலை முறையாக மறுநிலைப்படுத்தப்பட வேண்டும் எனவும், ஜனநாயகத்தைப் மதிப்பதாக கூறும் அதிபர்,நேற்றுக் கூறிய அந்த கருத்தை உடனடியாக நீக்கி தேர்தலை நடத்தி, நாடு மீண்டு வர சந்தர்ப்பம் வழங்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய அதிபர் நன்றியுணர்வு அறிந்தவராக இருந்தால் போராட்டத்திற்கு நன்றி சொல்ல வேண்டும் எனவும், போராட்டத்தினாலையே அவர் அதிபரானவர் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அமைதியான போராட்டம் வன்முறையாக மாறியது கடந்த மே 9 ஆம் திகதி நடந்த தாக்குதலாலையே எனவும் அவர் தெரிவித்தார்.

எந்தவிதமான வன்முறைகளையும் தாம் அனுமதிப்பதில்லை எனவும்,அவ்வாறான வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,வன்முறையும் மிலேச்சத்தனமுமின்றி இடம் பெற்ற போராட்டத்தை,அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களே வன்முறை ரீதியாக தாக்கினர் எனவும் தெரிவித்தார்.

அதேபோல்,அமைதியான பொது மக்கள் போராட்டத்தை அவசர கால சட்டத்தைப் பயன்படுத்தி ஒடுக்க முயன்றால், எதிர்க்கட்சியாக அதற்கு எதிராக முன் நிற்பதாகவும்,அதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குவதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் பொருளாதாரத்தை அழித்த ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக மக்கள் எழுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

அவ்வாறே,தான் மகிந்தவின் சீடராக இருந்திருந்தால் இந்நேரம் எதிர்க்கட்சித் தலைவராக அல்லாது அதிபராக நியமிக்கப்பட்டிருப்பேன் என தான் மகிந்த ராஜபக்சவின் சீடர் என்று கூறியவருக்கு கூறவேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே இவ்வாறான பொய்ப் பிரசாரங்களால் தாம் உள்ளிட்ட எதிர்க்கட்சியை அழிக்க முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,ராஜபக்சவைப் பின்பற்றுபவராக மாறி தனது கொள்கைகளையும் சுய மரியாதையையும ஒருபோதும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023