300 ஊழியர்களின் விடுமுறை இரத்து
நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இன்று (13) முதல் (15) வரை விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய தீயணைப்பு அதிகாரி ரோஹன நிஷாந்த சேனாநாயக்க (Nishantha Senanayake) தெரிவித்துள்ளார்.
இதன்படி, தீயணைப்பு சேவை திணைக்கள தலைமையகம், ஹெட்டியாவத்தை, கிரேண்ட்பாஸ், வெள்ளவத்தை, கோட்டை மற்றும் மாதிவெல உப நிலையங்களில் உள்ள சுமார் 300 ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரதான வாக்களிப்பு நிலையங்கள்
பிரதான வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் கொழும்பு ரோயல் மற்றும் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி மைதானங்களில் உப சேவை நிலையங்களுக்கு மேலதிகமாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் இரண்டு அம்பியூலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 50 தீயணைப்பு வாகனங்கள், உயிர்காக்கும் வாகனங்கள் மற்றும் அம்பியூலன்ஸ்கள் 17 வாகனங்கள் எந்த நேரத்திலும் அனுப்பிவைக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சேனநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |