கூட்டத்திலிருந்து இரண்டு அதிகாரிகளை வெளியேற்றிய கோட்டாபய
meeting
Gotabaya Rajapaksa
Two officials
By Sumithiran
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்(Gotabaya Rajapaksa)ஷ தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்ட இரண்டு அதிகாரிகள் தேவையான தகவல்களை கொண்டு வராத காரணத்தாலும் , அவர்கள் கூட்டத்திற்கு தயார் நிலையில் இல்லாத நிலையிலும் அவர்கள் இருவரையும் கூட்டத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக நடைபெற்ற கூட்டத்தில் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளத் தவறிய கொழும்பு கொமர்ஷல் உர லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மற்றுமொரு அதிகாரியை அரதலைவர் கடுமையாக சாடினார்.
இரண்டு அதிகாரிகளும் கூட்டத்திலிருந்து வெளியேறி, தேவையான தகவல்கள் கையில் கிடைத்தவுடன் மீண்டும் இணையுமாறு அரச தலைவரால் அறிவுறுத்தப்பட்டனர்.
மரண அறிவித்தல்