தனியார் மின்சக்தி நிறுவனம் மின்கட்டணம் தொடர்பில் விடுத்துள்ள அறிவித்தல்
Sri Lanka
Sri Lankan Peoples
By Beulah
பொதுமக்களுக்கு தனியார் மின்சக்தி நிறுவனம் முக்கிய அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
இந்த மாதம் முதல் இலங்கை தனியார் மின்சக்தி நிறுவனம் அல்லது LECO-வின் மின் கட்டணத்தில் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் மின்சார சபையின் மின் கட்டணத்துடன் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்பட்டிருந்ததாக அதன் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர டி சில்வா வலியுறுத்தியிருந்தார்.
சட்ட ரீதியிலான சிக்கல்
இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
சட்ட ரீதியிலான சிக்கல் காரணமாக இலங்கை தனியார் மின்சக்தி நிறுவனத்தின் மின் கட்டணத்துடன் அதனை சேர்க்க முடியவில்லை.
எவ்வாறாயினும், தற்போது சட்டப்பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளன.” என்றார்.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி