திசைகாட்டியின் பேரணிக்கு வந்தவர்களால் சர்ச்சை: முடிவை அறிவித்த ஜனாதிபதி!
தேசிய மக்கள் சக்தியின் பேரணிக்கு வந்த பேருந்துகளை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்திய ஓட்டுநர்கள், அதற்கு வசதி செய்த குழுக்கள் மற்றும் சம்பவத்தைப் பார்த்த காவல்துறையினர் மீது சட்டம் நடைமுறைப்படுத்தபட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றில் இடம்பெற்ற அரசியல் விவாதம் ஒன்றில் ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, அரசாங்கத்தின் பேரணிக்கு ஒரு குழு வந்ததால் காவல்துறையினர் எதுவும் செய்யவில்லையா? அவர்களிடம் வேறு ஏதேனும் சட்டம் உள்ளதா? "நீங்கள் பேசிய அமைப்பு மாற்றம் எங்கே? என ஊடகவியலாளர்கள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
ஜனாதிபதியின் விசாரணை
அதற்கு பதில் அளித்த ஜனாதிபதி அநுர, “இந்தப் பிரச்சினை எப்படி எழுந்துள்ளது என்பதை நான் பார்த்தேன். நான் அதை நியாயப்படுத்தவில்லை. இந்த மக்கள் தூரத்திலிருந்து வரும் ஒரு குழு.
இந்த மக்கள் தெற்கிலிருந்து வந்திருக்க வேண்டும். நான் அதை விசாரித்தேன். நான் மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, பதுளை மற்றும் அம்பாறை ஆகிய இடங்களுக்குப் பேசினேன்.
அந்தப் பேருந்துகளில் யார் இருந்தார்கள்? அவற்றின் அமைப்பாளர் யார்? எனக்குத் தெரிவிக்குமாறு அவர்களிடம் தெரிவித்துள்ளேன்.
இந்த சம்பவம் அதிவேக வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தில் நடந்தது. அங்கு ஒரு குறிப்பிட்ட அளவு இடம் உள்ளது. அந்த இடம் போதுமானதாக இல்லாதபோது, மக்கள் உள்ளே சிக்கிக் கொள்கிறார்கள்.
ஒழுக்காற்று நடவடிக்கை
அந்த நடவடிக்கை தவறு. அந்த சம்பவத்தை காவல்துறையினர் பார்த்துவிட்டு அது நடப்பதற்கு அனுமதித்திருந்தால், அதுவும் தவறு. அதற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த சம்பவத்தை கவனித்த காவல்துறையினர் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்கள், மறுபுறம் அதற்கு உதவிய குழுக்கள் இருந்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சட்டம் நடமுறைப்படுத்தப்பட வேண்டும்.
கட்சிக்குள் இருந்து இதில் ஈடுபட்ட திசைகாட்டியின் கட்சி ஆர்வலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நபர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. ஒவ்வொரு பேருந்திற்கும் ஒரு ஏற்பாட்டாளர் இருக்கிறார். ஏனென்றால் இது நடக்கக்கூடாத ஒன்று. நாட்டில் ஒரு பொதுச் சட்டம் உள்ளது.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
