பிரமிட் வணிக திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
Ranjith Siyambalapitiya
Sri Lanka
By Beulah
பிரமிட் வணிகத் திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தெஹியோவிட்ட பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குற்றவியல் சட்டம்

அதன்படி, குறித்த நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய வலியுறுத்தியுள்ளார்.