பிரமிட் திட்டங்கள் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் - இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை

Ranjith Siyambalapitiya
By Kathirpriya Aug 14, 2023 11:00 AM GMT
Report

எந்தவொரு பிரமிட் திட்டங்களிலும் ஈடுபடுவதை தவிர்க்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் (13) கேகாலை, ருவன்வெலவில் இடம்பெற்ற நிகழ்வொன்ன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் S 83(C) இன் படி "பிரமிட் திட்டங்கள் ஏற்கனவே இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

பிரமிட் செயற்பாடுகள் முழுமையான ஒரு திட்டமாகும், இது எந்த வகையிலும் சட்டப்பூர்வமானது அல்ல. இந்த சமுதாயத்தின் படித்த குடிமக்களாக, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது உங்கள் கடமை.

சிக்கலில் விழுகிறார்கள்

பிரமிட் திட்டங்கள் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் - இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை | Public Will Warned Pyramid Scheme State Minister

இது ஒரு வகையில் ஒரு சமூக வைரஸ், இந்தத் திட்டங்களில் ஈடுபடும் மக்கள் ஈற்றில் சிக்கலில் விழுகிறார்கள், அவர்கள் ஏற்கனவே நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில்  இது  அவர்களுக்குத் தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாறான திட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய வலியுறுத்தினார்.

இந்த செயற்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டியது முக்கியமானது எனவும் மக்கள் இந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு வணிகம் அல்ல

பிரமிட் திட்டங்கள் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் - இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை | Public Will Warned Pyramid Scheme State Minister

எனவே, இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை எச்சரிப்பது ஊடகங்கள் உட்பட பல தரப்பினரின் கடமையாகும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

"பிரமிட் நிறுவனங்கள் ஒரு வணிகம் அல்ல, ஒரு திட்டம் என்பதில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025