ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சட்டரீதியான செயலாளர் நாயகம் நானே: மகிந்த அமரவீர
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சட்டரீதியான செயலாளர் நாயகம் தாம் என்றும், சட்டரீதியாக செயலாளர் நாயகம் யார் என்பதை எதிர்வரும் காலங்களில் நீதிமன்றம் தீர்மானிக்கும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் 72வது மாநாடு
மேலும் அவர் கூறுகையில், “தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக செயற்படும் நபரை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
எனவே, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக தோன்றுவதற்கு அந்த நபருக்கு தார்மீக அல்லது சட்டரீதியான உரிமை கிடையாது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 72வது மாநாடு வெகு விமர்சையாக நடைபெற்றது, இதில் பிரதமர், முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் கலந்து கொண்டு, அனைவரையும் கட்சியில் இணையுமாறு கேட்டுக் கொண்டார்கள்” என்றார்.