மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்
Wrestling
World
By Shalini Balachandran
மல்யுத்த வீரர் மற்றும் நடிகராக ஹல்க் ஹோகன் (Hulk Hogan) 71 வது வயதில் காலமாகியுள்ளார்.
இது தொடர்பில் நேற்று (24) WWE தங்களது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ஹோகன் மரணித்ததாக அறிவித்துள்ளது.
குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "WWE மிகவும் வருத்தத்துடன் WWE ஹால் ஆஃப் ஃபேம் வீரர் ஹல்க் ஹோகன் மறைந்ததை தெரிவித்துக் கொள்கிறது.
ரசிகர்களுக்கு இரங்கல்
பொப் கலாச்சாரத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவரான ஹோகன், 1980 களில் WWE யை உலகளாவிய புகழுக்கு கொண்டு செல்ல உதவியவராவார்.
WWE, அவரது குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது” தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
