மடு அன்னையின் தவக்கால சிலுவை பாதையும் வழிபாடும்!
Jaffna
Sri Lanka
Tamil
By Raghav
4 days ago
தவக்கால சிலுவைப்பாதையும் வழிபாடும் இன்று (11.04.2025) பிற்பகல் குடத்தனை மடு மாத ஆலயத்தில் பக்தி பூர்வமாக இடம் பெற்றது.
யாழ். (Jaffna) குடத்தனை பொற்பதி ராயப்பர் தேவாலயத்திலிருந்து புறப்பட்ட சிலுவைப்பாதையும், மணல்காடு அந்தோனியார் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, குடத்தனை மடுமாதா ஆலயத்தை வந்தடைந்து.
தவக்கால வழிபாடு
மேலும், மணல்காடு பங்குத்தந்தை ஜோன் குருஸ் அடிகளார் தலமையில் ஆராதனைகள் இடம்பெற்றன.
கிறிஸ்தவ மக்களின் தவக்கால இக்காலப்பகுதியில் வருடாவருடம் மணல்காடு பங்கிற்க்கு உட்பட்ட பங்கு மக்களால் சிலுவைப்பாதை வழிபாடு நடாத்தப்பட்டு வருகின்றன.
இதில் மணல்காடு பங்கிற்கு உட்பட்ட பங்குமக்கள் பலரும் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
செய்திகள் : கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்