உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியம் : சூப்பால் சேதப்படுத்திய எதிர்ப்பாளர்கள்!
லியோனார்டோ டா வின்சியின் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தை இனம் தெரியாத நபர்கள் சூப்பால் சேதப்படுத்தியுள்ளனர்.
பிரான்சில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் உள்ள மோனாலிசா ஓவியத்தின் மீது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சூப் தாக்குதல்
உணவுப் பாதுகாப்பு தொடர்பான கோஷங்களை எழுப்பிய இரண்டு எதிர்ப்பாளர்கள், மோனாலிசா ஓவியத்தின் மீது சூப்பை வீசியுள்ளனர்.
ALERTE - Des militantes pour le climat jettent de la soupe sur le tableau de La Joconde au musée du Louvre. @CLPRESSFR pic.twitter.com/Aa7gavRRc4
— CLPRESS / Agence de presse (@CLPRESSFR) January 28, 2024
இதையடுத்து, குறித்த ஓவியத்துக்கு முன்பாக நின்ற வண்ணம், ஓவியமா அல்லது ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவுக்கான உரிமையா முக்கியமானது என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குண்டு துளைக்காத கண்ணாடி
எனினும், குண்டு துளைக்காத கண்ணாடியால் குறித்த ஓவியம் பாதுகாக்கப்பட்டதால், அதனை எதிர்ப்பாளர்களால் சேதப்படுத்த முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அருங்காட்சியகத்தின் பாதுகாவலர்களால் மோனாலிசா ஓவியம் இருந்த இடம் கருப்பு திரைகளால் பூட்டப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உலகின் மிகவும் பிரபலமான ஓவியமாக லியோனார்டோ டா வின்சியின் மோனாலிசா ஓவியம் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |