மருத்துவர்கள் தங்களின் வேலையை செய்ய விடவேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை
மருத்துவர்கள் தங்கள் வேலையைச் செய்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளின் வேலையைச் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு அதை செய்யாமல் விடுவதால் சிரமங்களுக்கு உள்ளாகுவது நாட்டு மக்களே என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
''எதிர்க்கட்சியிலிருந்து ஓர் மூச்சு ' நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமைவாக புத்தளம் ஆனமடுவ ஆதார வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
இந்த நேரத்தில் முன்னுரிமை என்ன என்பதை புரிந்து கொள்ளும் திறன் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும் என்றும் கடுமையான பேரிடராக மாறிய கொரோனா கட்டுப்படுத்தலை அரசாங்கம் மறந்துவிட்டு நடை பாதை திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தும் "ஜன சுவய" கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் சமூக நலத்திட்டத்தின் 30 ஆவது கட்டமாக 20 இலட்சம் ரூபா பெறுமதியான பெறுமதி வாய்ந்த அத்தியாவசிய மருத்துவமனை உபகரணங்கள் இன்றையதினம் புத்தளம் ஆனமடுவ ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக 2 இலட்சத்து 95ஆயிரம் ரூபா பெறுமதி வாய்ந்த 3 Patient Monitor இயந்திரங்கள், ஒன்று 5 இலட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபா பெறுமதி வாய்ந்த இரண்டு ICU Beds என்பனவேஆனமடுவ ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் தர்ஷிகா சிறிவர்தன (Dr.Darshika Siriwardena) அவர்களிடம் இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஆனமடுவ ஸ்ரீ ஆனந்தராம விகாரையின் தேரர் குடாவெவ விஜிதானந்த தேரர் (Vijithananda Thera) உட்பட மகா சங்கத்தினர், ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் பெரேரா (Niroshan Perera), ஹெக்டர் அப்புஹாமி (Hector Appuhamy), முன்னாள் பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா (Neomal Perera), ஐக்கிய மக்கள் சக்தியின் ஆனமடுவ தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் காமினி வடிஹமங்காவ ( Gamini Vadihamangawa) உட்பட மாவட்டத்தின் அதிகளவிலான மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இதற்கு முன்னர் 29 கட்டங்களில் 856 இலட்சத்து 34ஆயிரம் ரூபா பெறுமதி வாய்ந்த மருத்துவமனை உபகரணங்களை ஐக்கிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










